மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இறங்குமுகத்தில் செல்கிறது. குறிப்பாக, சென்னையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கு மாறாக, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இந்த மாவட்டங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மக்கள் சரியாகப் பின்பற்றாத காரணத்தினால்தான் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (மே 27) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளைக் கண்காணிக்கவும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு மு.அ.சித்திக், முதன்மைச் செயலாளர் / ஆணையர், வணிகவரித் துறை, திருப்பூர் மாவட்டத்துக்கு சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை செயலாளர், ஈரோடு மாவட்டத்துக்கு டாக்டர் இரா.செல்வராஜ், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆகிய மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 28 மே 2021