மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

தமிழக அரசின் நடவடிக்கைகளில் திருப்தி: நீதிமன்றம்!

தமிழக அரசின் நடவடிக்கைகளில் திருப்தி: நீதிமன்றம்!

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணையிலிருந்து வருகிறது.

இவ்வழக்கு இன்று (மே 27) விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் தமிழகம் மற்றும் புதுவைக்குத் தடுப்பூசி , மருந்து ஒதுக்கீடு செய்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமிழகத்துக்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து ஒதுக்கீடு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில், 'மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டைத் தவிர்த்து, மாநிலத்தில் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நர்சிங் மாணவிகளும் வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்ட சில வழக்கறிஞர்கள் ஆஜராகி, கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும், மனநல காப்பகத்தில் இருப்பவர்களுக்கும் கொரோனா சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல் முழுவதுமாக மூடப்படுவதால் உறவினர்கள் அவர்களை அடையாளம் காண முடிவதில்லை என்றும் குறிப்பிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் வாதம் மற்றும் அறிக்கை திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரைத் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவே செயல்படுகிறோம். நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்றும் நீதிமன்றம் அரசை நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை உறவினர்கள் காண முகம் மட்டும் தெரியும் வகையில் மூட வேண்டுமென அறிவுறுத்தினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது திருப்தி அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டினர்.

தமிழகத்தைச் சேர்ந்த அதிகமானோர் ஊரடங்கு மீறி புதுச்சேரிக்குள் நுழைவது உள்ளிட்டவற்றைப் புதுச்சேரி அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கு விசாரணையை மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 27 மே 2021