மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் இன்று மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (மே 25) 21, ஐஏஎஸ் அதிகாரிகளும், நேற்று 10 ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (மே 27) 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட உத்தரவில், “

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் மாற்றப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவர் எல் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்புச் செயலர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சுப்பிரமணியம் மாற்றப்பட்டு, டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வியாழன் 27 மே 2021