மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

முழு ஊரடங்கு நீட்டிப்பா?

முழு ஊரடங்கு நீட்டிப்பா?

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இதனை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்குத் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. காய்கறி மற்றும் பழங்கள் கூட தோட்டக்கலை துறை சார்பில் அந்தந்த பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஊரடங்கின் நன்மை தெரியத் தொடங்கி இருப்பதாகவும், எனினும் இதில் திருப்தி இல்லை தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மே 31ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் தளர்வுகள் இன்றி ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது ஏதேனும் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்திருக்கிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 27 மே 2021