மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

ரங்கசாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நமச்சிவாயம்

ரங்கசாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நமச்சிவாயம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் ஆதரவை பாஜக திரட்டி வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், என்.ஆா். காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, என்.ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்தனர். முதலில் ரங்கசாமி மட்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்கு பிறகு நேற்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதனிடையே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணை முதல்வர் பதவிக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், அப்பதவி உருவாக்கத்துக்கு முதல்வர் ரங்கசாமி சம்மதிக்காமல் கறாராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை, பாஜக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக எம்.எல்.ஏ.க்கள், நமச்சிவாயம், ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார், கல்யாண சுந்தரம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணன், பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் , பாஜகவில் இணைந்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் ( ரங்கசாமியை எதிர்த்து ஏனாம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றவர்) என 12 பேர் கலந்துகொண்டனர்.

பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, ஆளுநர் தமிழசை சவுந்தரராஜனை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்திருக்கின்றனர். மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக பாஜக தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து நாம் விசாரித்ததில், “துணை முதல்வர் பதவி வேண்டும் என்று நமச்சிவாயம் பிடிவாதமாக இருக்கிறார். தற்போது பாஜகவின் பலம் 12ஆக இருக்கிறது. மேலும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும், மாற்று கட்சியிலிருந்து வருவதற்கும் தயாராக இருக்கின்றனர். ஒன்று துணை முதல்வர் பதவி வேண்டும், இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியமைக்க முயன்று வருகிறார்” என புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வணங்காமுடி

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வியாழன் 27 மே 2021