மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

நிரவ் மோடியின் மாமன் மெகுல் சோக்ஸி கைது- சேஸிங் ரிப்போர்ட்!

நிரவ் மோடியின் மாமன் மெகுல் சோக்ஸி கைது- சேஸிங் ரிப்போர்ட்!

பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் 13,500 கோடி மோசடி செய்த வழக்கில் 2018 ஆம் ஆண்டில் இருந்து காணாமல் போன மெகுல் சோக்ஸி நேற்று (மே 26) போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வைர வியாபாரியும் வங்கி மோசடியாளருமான நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் இருக்கிறார். அவரது மாமனான இந்த மெகுல் சோக்ஸி தனது வங்கி மோசடி பற்றிய தகவல்கள் 2018 இல் வெளிவர இருந்த நிலையில இரவோடு இரவாக இந்தியாவில் இருந்து தப்பித்து கரீபீயன் தீவு நாடான ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து இந்திய அரசு ஆண்டிகுவா நாட்டு அரசையும், இன்டர்போல் போலீஸாரையும் நாடியது. சோக்ஸி எங்கிருந்தாலும் அவரைப் பிடித்து இந்தியாவுக்கு விசாரணைக்காக கொண்டுவருவது பற்றி, அவருக்கு மஞ்சள் நோட்டீஸை பிறப்பித்தது இன் டர்போல் போலீஸ்.

ஒருபக்கம் தேடும் பணிகள் என்றால் இன்னொரு பக்கம் ஆன்டிகுவா நாட்டு குடியுரிமையை ரத்து செய்யும் முயற்சியிலும் இந்தியா இறங்கியது. இதை எதிர்த்து சோக்ஸி அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் கடந்த மே 23 ஆம் தேதியில் இருந்து சோக்ஸியை காணவில்லை என்று அவரது வழக்கறிஞர் ஆன்டிகுவா நகர போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். 24 ஆம் தேதி இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 ஆயிரத்து 600 கோடி வங்கி மோசடி மன்னனை கைது செய்யும் தீவிரத்தில் இந்தியா இருக்கும் நிலையில் அவர் காணாமல் போன தகவல் பரபரப்பைக் கிளப்பியது. 23 ஆம் தேதி வீட்டில் இருந்து காரில் புறப்பட்டவரை காணோம் என்றும் அவரது காரை மட்டும் கண்டுபிடித்ததாகவும் ஆன்டிகுவா போலீஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி உடனடியாக விசாரணை தீவிரமானது. அப்போதுதான் ஆன்டிகுவாவில் இருந்து பக்கத்திலுள்ள டொமினிகா என்னும் சிறிய தீவுக்கு படகு மூலம் சோக்ஸி தப்பிச் சென்றது தெரியவந்தது. டொமினிகாவில் இருந்து க்யூபா நாட்டுக்குத் தப்பிச் செல்ல சோக்ஸி திட்டமிட்டதும் தெரியவந்தது. க்யூபாவிலும் குடியுரிமை வாங்கி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

உடனடியாக ஆன்டிகுவா போலீஸார் டொமினிகா போலீஸாரைத் தொடர்புகொண்டு, இன்டர்போல் போலீஸால் எல்லோ நோட்டீஸ் விதிக்கப்பட்ட சோக்ஸி டொமினிகாவில் இருப்பதாகவும் அவரை அங்கிருந்து தப்ப விட வேண்டாம் என்றும் கூறினார்கள்.

தக்க நேரத்தில் கிடைத்த தகவலால் டொமினிகா போலீஸார் கியூபாவுக்கு தப்பிக்க இருந்த சோக்ஸியை துரத்திப் பிடித்தனர். அவரை ஆன்டிகுவா போலீஸாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் ப்ரவுன், “மெகுல் சோக்ஸிக்கு ஆன்டிகுவாவில் குடியுரிமையும் சட்டப் பாதுகாப்பும் உள்ளது. இன்னும் வழக்கு முடியவில்லை. எனவே அவரை டொமினிகாவில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்ப வேண்டும் என்று டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட்டிடம் பேசியுள்ளேன். அடுத்த 48 மணி நேரத்தில் அவர் டொமினிகாவில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் இந்தியா அனுப்பப்படுவார். சோக்ஸி மீண்டும் ஆன்டிகுவா வந்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்ப இயலாது” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் வங்கி மோசடி மன்னன் மெகுல் சோக்ஸி டொமினிகாவில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு அனுப்பப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 27 மே 2021