மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

ராஜகோபாலன், ஆர்.எஸ்.பாரதியின் உறவினரா?

ராஜகோபாலன், ஆர்.எஸ்.பாரதியின் உறவினரா?

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன், ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பிரச்சினைகள் வெவ்வேறு விதமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபாலன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை உண்மை என்று நம்பி பலரும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர்கள் பிரிவைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் நேற்று அளித்த புகார் மனுவில், “சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து அவரை ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

குறிப்பாக நாராயணன் சேஷாத்திரி என்பவர், கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்ற ஆசிரியர், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு உறவினர் என்றும், அதனால் இந்த வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் என்றும், பொதுவெளியில் ஒரு சமூக வலைதளத்தில் (Face Book) தன்னுடைய கூற்றுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், தான் கூறுவது பொய் என்று உணர்ந்தோ அல்லது அதன் உண்மை குறித்து ஆராயாமலோ தன்னுடைய சித்தாந்தத்திற்கு எதிர்க்கருத்து கொண்டவர் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பெயரைக் கெடுக்கும் எண்ணத்தோடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து மேலும் பலரும் இதைப் பதிவிட்டு வருவதால் இந்த அவதூறு பல தரப்பட்டவர்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்பதும் பொய். அதேபோல் அப்படி அவர் உறவினர் என்பதால் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்கும் என்பதும் அவர் மீது நடவடிக்கை எடுக்காது என்பதும் கீழ்த்தரமான அவதூறு என்பதோடு அல்லாமல் ஆட்சியின் மீதும் எங்கள் கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டு, மற்றும் மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்க கையாளப்படும் உத்தி.

எனவே, மேற்கூறிய நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதைப் பின்பற்றி சமூக வலைதளங்களில் மீள் பதிவு செய்தோர்மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்தப் பதிவுகளை நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 27 மே 2021