மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்!

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்!

மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின் நுகர்வோருக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக சில அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில்,

தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் கடந்த 10ஆம் தேதி முதல் வருகிற 31ஆம் தேதி வரை இருந்தால், அந்த தொகையை ஜூன் 15ஆம் தேதி வரை மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணமின்றி செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத, உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்குத் தாமதக் கட்டணத்துடன் செலுத்தவும் கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இணைய வழியில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-பிரியா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வியாழன் 27 மே 2021