மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

கொரோனா : சென்னையை பின்னுக்குத் தள்ளிய கோவை!

கொரோனா : சென்னையை பின்னுக்குத் தள்ளிய கோவை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மட்டும் குறையாமல், அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்த சென்னையை பின்னுக்குத் தள்ளி, கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று(மே 26) ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த எண்ணிக்கை 19,45,260 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 18,713 பேர் ஆண்கள், 15,051 பேர் பெண்கள்.

கொரோனா தொற்றால் இன்று 475 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 21,815 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மருத்துவமனையில் 3,10,224 பேர் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், 29,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,62,518 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 4268 பேரும், சென்னையில் 3561 பேரும்,செங்கல்பட்டில் 1302 பேரும், ஈரோட்டில் 1642 பேரும், கன்னியாகுமரியில் 1116 பேரும், மதுரையில் 1538 பேரும், திருவள்ளூரில் 1181 பேரும், திருப்பூரில் 1880 பேரும், திருச்சியில் 1775 பேரும், விருதுநகரில் 1198 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 98 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், கோவையில் 31 பேரும், கன்னியாகுமரியில் 26 பேரும், சேலத்தில் 31 பேரும், திருவள்ளூரில் 31 பேரும், திருச்சியில் 20 பேரும், வேலூரில் 20 பேரும் கொரோனாவுக்கு பலியாகிவுள்ளனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 26 மே 2021