மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

தடுப்பூசியால்தான் உயிர் பிழைத்தேன்: துரைமுருகன்

தடுப்பூசியால்தான் உயிர் பிழைத்தேன்: துரைமுருகன்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிர் பிழைத்தேன் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு(82 ) கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே அவர் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் செலுத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துரைமுருகன் சென்னை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, ‘துரைமுருகன் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டதால், இந்த வயதிலும் அதிக ரிஸ்க் இல்லாமல், அவரது உடல் தாக்குப்பிடித்தது’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சிறிது நாள் ஓய்விலிருந்த அவர், பின்னர் தேர்தல் பணி, தற்போது கொரோனா தடுப்பு பணி மற்றும் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று (மே 26), வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலகத்தில், 700 நடமாடும் வாகனங்களின் மூலம் காய்கறிகள் விற்பனை திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தடுப்பூசி முகாம் தொடக்கவிழாவிலும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “தடுப்பூசி போட்டுக்கொண்டால் செத்துப் போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள். இது தவறானது. தடுப்பூசி போடமாட்டேன் என்கிறார்கள்.

தடுப்பூசி வந்ததும் நான் இரண்டு டோஸும் செலுத்திக்கொண்டேன். என்னுடைய வயதிற்கு, பைபாஸ் சிகிச்சை செய்துகொண்ட காரணத்திற்காக என்னை கொரோனா தாக்கியிருக்க வேண்டும். ஆனால் தாக்காமலிருந்ததற்கு காரணம் தடுப்பூசிதான். தடுப்பூசியால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. அதனால் தான் நான் உயிர் பிழைத்தேன். தடுப்பூசி போட்டுக்கொண்டு உங்களையும் சமுதாயத்தையும் காத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் கொரோனாவை நாம் முழுமையாக ஒழிக்க முடியும்” என்றார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 26 மே 2021