மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

பருப்பு பாமாயில்: டெண்டருக்கு இடைக்காலத் தடை!

பருப்பு பாமாயில்: டெண்டருக்கு இடைக்காலத் தடை!

பொது விநியோக திட்டத்திற்கு 20,000 டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (மே 26) தடை விதித்துள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிப கழகம் சார்பாக 2 கோடி குடும்ப அட்டைதாரருக்குப் பருப்பு, பாமாயில், சீனி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில், முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல் புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனம் கடைசி மூன்று ஆண்டுகளில் 71 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டி இருக்கவேண்டுமென்று பழைய நிபந்தனையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் புதிய டெண்டர் நிபந்தனைகளில் கடைசி மூன்று ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் வருமானம் இருந்தால் போதும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி டெண்டர் அறிவிப்பில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட வில்லை.

எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக பொது வினியோகத் திட்டத்திற்காக 20 ஆயிரம் டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கொரோனா சூழலில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவே அவசரக்கால டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், அதற்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 26 மே 2021