மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

ஆதாரத்தை காட்டியதும் அமைதியான பிஎஸ்பிபி பள்ளி!

ஆதாரத்தை காட்டியதும் அமைதியான பிஎஸ்பிபி பள்ளி!

கடந்த இரு தினங்களாக பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்தான் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியானதிலிருந்து அப்பள்ளியின் மீதான புகார்கள் அடுக்கடுக்காக வந்தமயமாக உள்ளது.

கேகே நகரில் உள்ள பள்ளியும் தேனாம்பேட்டை திருமலை நகரில் உள்ள பள்ளியும் ஒய்ஜி மகேந்திரனின் அண்ணி ஷீலா ராஜேந்திரனால் நடத்தப்பட்டு வருகிறது. ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி என்கிற ஒய்ஜிபி பள்ளியின் நிர்வாகியாக இருந்தார்.

கேகே நகரில் 15வது செக்டரில் ஹவுசிங் போர்டு பகுதிக்கு சொந்தமான இடத்தில்தான் இப்பள்ளி அமைந்துள்ளதாகவும், இந்த இடம் ஏமாற்றி பறிக்கப்பட்டது என்றும் பள்ளிக்கு சொந்தமான கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், வருமான வரித் துறை அதிகாரிகளின் பிள்ளைகள் என அனைத்து பிரபலங்களின் பிள்ளைகளும் இப்பள்ளியில்தான் படித்தார்கள், படித்துகொண்டும் இருக்கிறார்கள். இப்பள்ளியில் எந்த உயர் அதிகாரிகளின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது. க்ளார்க் முதல் ஆசிரியர்,பள்ளியின் முதல்வர் என அனைவருமே தங்களுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்பதுபோல் நடந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், கொடைக்கானலில் சட்டவிரோதமாக ஒய்ஜிபி வாங்கிய சொத்திற்கு வருமான வரித்துறையை சரிகட்டுவதற்காகதான் அந்த பள்ளியில் தனது மகளுக்கு சீட்டு வழங்கப்பட்டது என குட்டி பத்மினி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஆதாரங்களோடு விசாரிக்கும் காவல்துறை

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலெட்சுமி, தியாகராய நகர் சட்ட ஒழுங்கு துணை ஆணையர் கிரண், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் மாணவர்களிடம் நேரில் சென்று விசாரிப்பது, பெற்றோர்களிடம் விசாரிப்பது என இவ்வழக்கில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நேற்றும், இன்றும் பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது....

“இவ்விவகாரம் தொடர்பாக, பள்ளி நிர்வாக தரப்பிலிருந்து முதலில் மறுப்பு தெரிவித்தார்கள். பின்னர், ஆதாரங்களை காட்டியதும் அமைதியாகிவிட்டனர். மேலும், மாணவிகள் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது

ஆன்லைன் வகுப்பில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் பாடம் நடத்தும்போது எதார்த்தமாக மாணவர்களின் தாய்மார்களிடம் பேச நேர்ந்தால் அவர்களிடம் இதையே சாக்காக வைத்து மேலும் குறுஞ்செய்தி அனுப்புவது , கால் செய்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் இதேபோல நேரடி வகுப்புகள் நடந்த நாட்களிலும் மாணவிகளிடம் எப்போதுமே இரட்டை அர்த்தங்களில் பேசியிருக்கிறார். மேலும், அவர் மாணவிகளை பார்க்கும் பார்வை ஒருவிதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜகோபாலனிடம் விசாரிக்கும்போது ஆரம்பத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லையென்றும், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லாததுபோல் பேசியிருக்கிறார். ராஜகோபாலன் வாட்ஸ் அப் மற்றும் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீண்டும் எடுத்து, அதை காட்டியபோதுதான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்பு கொண்டுள்ளார்.

கொஞ்சம் சோஷியலாக பழகும் மாணவிகளை ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லி அழைப்பது, உள்ளிட்ட செயல்கள் மூலம் அத்துமீறியுள்ளார்” என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சம்பவம் பூகம்பகமாக வெடிக்க ஆரம்பித்தவுடன், இந்த பிரச்சினையில் தங்களுக்கு உதவுமாறு டிஜிபியிடமும், முன்னாள் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமும் பள்ளி நிர்வாகம் கேட்டதாகவும், இதில் தாங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கைவிரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 26 மே 2021