மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

குடும்ப அட்டைக்கு மூவாயிரம் ரூபாய்- புது முதல்வர் அறிவிப்பு!

குடும்ப அட்டைக்கு மூவாயிரம் ரூபாய்-  புது முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூன்று நியமன எம்.எல்,ஏ,க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி தேர்தலில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7 ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் உடனடியாக அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பி, தனிமையிலிருந்து வந்தார். இதன் காரணமாக, அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் இன்று (மே 26), முழு பௌர்ணமியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன் பிறகு சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, முதல் நபராக, எம்எல்ஏவாக பதவி ஏற்று கொண்டார். அவருக்குத் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பாஜக எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், ஜான்குமார், ரிச்சார்ட் ஜான்குமார்,கல்யாணசுந்தரம் ஆகிய நான்கு பேரும் மதியம் பதவி ஏற்க நேரம் கேட்டிருக்கின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுகொண்டதும் சட்டமன்றத்தில் முதல் அறிவிப்பு செய்யவேண்டும் என்ற திட்டத்தில்... “3.5 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும்” என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனிடம் கோரிக்கை வைத்தார் முதல்வர் ரங்கசாமி.

நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அட்டைக்கு ரூ. 3ஆயிரம் கொடுக்கலாம் என்று துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியதும், முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் உள்ள 3.5 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் தலா மூன்றாயிரம் வழங்கப்படும் என்று கையெழுத்திட்டு அறிவிப்பு செய்தார்.

அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வது தொடர்பாக பாஜக என்.ஆர் காங்கிரஸ் இடையில் பேச்சுவார்த்தை நீடித்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாகத் தேர்தல் முடிவுகள் வந்து 23 நாட்களுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுள்ளனர்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

புதன் 26 மே 2021