மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

மின் கட்டணம் செலுத்துவது எப்படி?: செந்தில் பாலாஜி

மின் கட்டணம் செலுத்துவது எப்படி?: செந்தில் பாலாஜி

பொதுமக்களே யூனிட் அளவை புகைப்படம் எடுத்து, மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று விளக்கமளித்தார்.

ஊரடங்கு மற்றும் கோடைக் காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த 23ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் என்றும் மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாகப் புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ் அப் (Whatsapp) செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதுபோன்று, நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தைப் பொதுமக்களே சுயமாகக் கணக்கீடு செய்து கொள்ளலாம் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள கணக்கைப் புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் வாயிலாக மின்வாரிய உதவிப் பொறியாளரின் கைபேசி, இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். அந்தந்த மின்வாரிய உதவிப் பொறியாளர்களின் எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன என மின்வாரியம் தெரிவித்திருந்தது

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணத்தை அளவிட உங்கள் வீட்டில் மின் கட்டண மீட்டரில் உள்ள யூனிட் அளவை மொபைலில் புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப்பில் அனுப்பலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருந்தோம். அதில் அனுப்பினாலே போதுமானது.

அல்லது மின்கட்டணத்தைச் செலுத்தச் செல்லும்போது அந்த புகைப்படத்தை எடுத்துச் சென்றால் போதும். இப்போது அதில் அவசர தேவை ஒன்றும் இல்லை. மின் கட்டணம் செலுத்தச் செல்லும்போது எடுத்துச் சென்றாலே போதும்” என்று குறிப்பிட்டார்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

புதன் 26 மே 2021