மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

21 முக்கிய துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம்!

21 முக்கிய துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம்!

தமிழகத்தில் கல்வி, பொதுப்பணி உள்ளிட்ட 21 முக்கிய துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, 21 முக்கிய துறை  செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட உத்தரவில்,

“கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த கே.கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவியிலிருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா மாற்றப்பட்டுள்ளார்

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் ஆலோசனைக் குழுவான இண்ட்கோசர்வ், முதன்மைச் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராகவும்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஜோதி நிர்மலா சாமி, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளராகவும்

டிட்கோ  நிர்வாக இயக்குநராக இருந்த காக்கர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராகவும்

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த தீரஜ் குமார், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளராகவும்

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளார் சந்திப் சக்‌ஷேனா பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும்

கருவூலம் மற்றும் கணக்குகள் துறையின் ஆணையர் குமார் ஜெயந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும்

தமிழ்நாடு இல்ல ஆணையர்-1 ஹிதேஷ் குமார் மக்வானா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளராகவும்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளராக இருந்த கார்த்திகேயன், நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராகவும்,

போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளராகவும்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளராகவும்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளராகவும்

தொழில்துறை சிறப்புச் செயலாளராக இருந்த அருண் ராய், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையின் செயலாளராகவும்

கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும்

உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் செல்வி அபூர்வா, கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மை செயலாளராகவும்

பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராகவும்

நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராகவும்

வெளிநாட்டு மனிதவளக் கழகத்தின் (ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்) நிர்வாக இயக்குநராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், எரிசக்தித்துறையின் முதன்மைச் செயலாளராகவும்

கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளராகவும்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளர் சாம்பூ கல்லோலிகர், சமூகநலத்துறை மற்றும் சத்துணவு சட்டத்துறை முதன்மை செயலாளராகவும்

சமூக பாதுகாப்புத்துறை ஆணையராக இருந்த லால்வீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 26 மே 2021