மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

தடுப்பூசி உற்பத்தி : முதல்வர் ஆய்வு!

தடுப்பூசி உற்பத்தி : முதல்வர் ஆய்வு!

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் எச்.எல்.எல் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிற நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் எச்.எல்.எல் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள், தடுப்பூசி உற்பத்தி தேவைப்படும் நிதி, தடுப்பூசி தயாரிப்பை தொடங்க எத்தனை நாள்கள் ஆகும் உள்ளிட்ட விவரங்களை அங்குள்ள அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று (25) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும்.

மத்திய அரசின் நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ. ஜான் லூயிஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 26 மே 2021