மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

என் காலத்தில்தான் கொரோனா புதிய நோய்: எடப்பாடி பழனிசாமி

என் காலத்தில்தான் கொரோனா புதிய நோய்: எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதன் முறையாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே25) சேலத்தில் நிருபர்களை சந்தித்தார்.

”இன்றுதான் முதன் முறையாக உங்களை சந்திக்கிறேன். குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் முதல் முறையாக உங்களை சந்திக்கிறேன்” என்ற எடப்பாடியிடம், “கொரோனா நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் என இரு தவணையாக அரசு வழங்குவது பற்றி கேட்டபோது, “நிதி நிலைக்கு ஏற்றதுபோல அந்தந்த அரசு நிவாரணம் வழங்கும்” என்று பதிலளித்தார்.

திமுக அரசின் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர்,

“முதல் அலையை விட இரண்டாவது அலை மிக வேகமாகவும் வீரியமாகவும் இருக்கிறது.இன்றைக்கு இறப்பு சதவிகிதம் கூடியிருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையாக இருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோயின் தன்மை மாறியுள்ளது. ஆக்ஸிஜன் அதிக அளவு தேவைப்படுகிறது. புதிய அரசு விலைமதிக்க முடியாத மக்களின் உயிர்களை காத்திட போர்க்கால அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் எல்லா மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டது. மூச்சுத் திணறலோடு வருகிற கொரோனா நோயாளிகள் பெட் கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே இறந்துவிடுகிறார்கள். அவர்களை அப்படியே அனுப்பி விடுகிறார்கள். வீட்டுக்குப் போய் பல மணி நேரம் வைத்து சடங்குகள் செய்து அடக்கம் செய்கிறார்கள். இதனால் நோய்ப் பரவல் ஏற்படுகிறது. இதைத் தடுத்து கொரோனா தொற்றால் இறந்தவர்களை அதற்குரிய முறையில்தான் அடக்கம் செய்ய வேண்டும். 13 பேர் கொண்ட குழுவிலே இதையெல்லாம் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால் நான் முதலமைச்சராக இருந்தபோது இது புதிய நோய், என்ன அறிகுறி என்று கூட தெரியாது. உரிய சிகிச்சை முறைகள் கூட முழுமையாக தெரியவில்லை. அந்த காலகட்டத்தில் கூட உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளை நம்முடைய மருத்துவர்களுக்கு வழங்கி அதன் மூலமாக சிறப்பான சிகிச்சை அளித்து கொரோனாவை கட்டுப்படுத்தினோம். நாங்கள் எல்லாமே செய்து வைத்துவிட்டோம். இன்று கூடுதலாக நோயாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு உரிய படுக்கைகளை ஏற்பாடு செய்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதுதான் இந்த அரசின் கடமை” என்று கூறினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

செவ்வாய் 25 மே 2021