மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு!

பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு!

பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோ உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளிக்க மாணவிகள் தாமாக முன்வர வேண்டும் என காவல்துறை வேண்டுகோளுக்கு இணங்க, மேலும் 30 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், நிர்வாகி, ஆசிரியர் ராஜகோபாலன் உள்ளிட்ட 5 பேருக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஐந்து பேரும் ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனிடமும். பள்ளி தாளாளர் ராஜேந்திரனிடமும் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தலைமை செயலாளருக்கும், தமிழக டிஜிபி திரிபாதிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஆன்லைன் வகுப்பில் இதுபோன்று நடப்பது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக கண்காணிக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து 3 நாட்களுக்குள் விசாரணை முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,” இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பது குறித்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு, ஏற்கனவே, வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வைத்துப் பார்த்தால் அவர்கள் அதை பின்பற்றவில்லை என்று தெரிகிறது. எனவே, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்திவுள்ளோம்.

பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லாசிரியர்கள் மீது பொய்யான புகார் வந்துவிடக்கூடாது என்பதற்காக புகார்களை உறுதி செய்வதற்காகவும், புகாரில் உண்மை தன்மையை அறியவும் இக்குழு விசாரணை நடத்தும்.

ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்று நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் எங்களுக்கு ஒரு பாடம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள ஆன்லைன் வகுப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை மாற்றியமைத்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 25 மே 2021