மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

விமர்சனத்துக்கு உள்ளாகும் மதுவந்தி

விமர்சனத்துக்கு உள்ளாகும் மதுவந்தி

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு சம்பவத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகள் மதுவந்தியும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நாங்கள் அந்த பள்ளியின் டிரஸ்டிதான். பள்ளியை நாங்கள் நிர்வகிக்க இல்லை என்று தந்தையும், மகளும் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தாலும், இவர்கள் மீதான விமர்சனம் குறைந்தபாடில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக, ட்விட்டரில் நடந்த ஸ்பேஸ் விவாதம், அர்ஜூன் சம்பத், மதுவந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் மதுவந்திக்கும், சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

அதில், பத்ம சேஷாத்ரி மாதிரியான பள்ளிகளை பிராமின் என்று தாக்குவது இப்போது இல்லை,பல வருடங்களாக திராவிடத்தை சேர்ந்தவர்கள் இதுபோன்று செய்து வருகிறார்கள். வீட்டு வம்சம் விருத்தியடைய பிராமண பெண்கள் தேவை ஆலோசனை, அறிவுரை கூறுவதற்கு பிராமண ஐஏஎஸ், டாக்டர், வழக்கறிஞர்கள் தேவை. ஆனால், பிரமாண எதிர்ப்பு என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். என்னை டார்கெட் செய்வது என்பது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோன்று, மதுவந்தி ட்ரோல்னு ஒரு பக்கத்தை உருவாக்கி பேசி வருகின்றனர். இதை பற்றி எனக்கு கவலை இல்லை” என்று மதுவந்தி பேசுகிறார்.

இதையடுத்து பேசிய பெண் ஒருவர், "மதுவந்தி மேடம்.. உங்களை மேம்னு சொல்லவே கூச்சமா இருக்கு.. ஒரு டீச்சர் இப்படி எல்லாம் பண்ணி இருக்காங்க.. அதையெல்லாம் கேட்கிறதை விட்டுட்டு, இங்கே வந்து உட்கார்ந்து பள்ளி நிறுவனங்களை தாக்கி பேசுகிறார்கள் என்று சொல்றீங்களே, உங்களுக்கு வெக்கமாக இல்லை? என்று கேட்கிறார்.

அதற்கு, “நான் முதலில் டிரஸ்டி இல்லை. அது தவறான தகவல். பலரை போன்று நானும் அந்தப் பள்ளியில் படித்த மாணவிதான்.. குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அந்த பள்ளியில் படித்ததற்காகவோ, ஒய்.ஜி.பி அவர்களின் பேத்தி என்பதற்காகவோ, ஒரு கல்வியாளர் என்பதற்காகவோ நான் வெட்கப்படவில்லை. நான் படித்த பள்ளியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே என்றுதான் நான் வெட்கப்படுகிறேன். ஆனால் "இந்து, பிராமின்" என்று குறிப்பிட்டு குற்றம் சாட்டப்படுவதை நான் விரும்பவில்லை, வெறுக்கிறேன். ஒரு இந்துவாக, பிராமினாக இருப்பதற்கு நான் வெட்கப்படவில்லை. இதுதான் என்னுடைய பதில்” என்று மதுவந்தி அந்த பெண்ணிற்கு பதிலளிக்கிறார்.

தற்போது இந்த விவாதம்தான் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

செவ்வாய் 25 மே 2021