மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

தமிழில் பதவியேற்றால் தமிழரா?

தமிழில் பதவியேற்றால் தமிழரா?

ச. அன்வர்

கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி தலைமையிலான அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்பாக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், மே 24 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்...

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு ராஜா தன் தாய் மொழியான தமிழ் மொழியில் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் தமிழில் பதவியேற்றுக் கொண்டதை கொண்டாடி மகிழ்கிறது ஒரு கூட்டம்.

ஒரு தேயிலை தோட்ட தொழிலாளியின் மகனாக பிறந்த இந்த ராஜாவுக்கு முன்பே...வழக்கமாக தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுகிற எல்லோரையும், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி, தமிழில்தான் பதவி ஏற்கச் சொல்லும். இவருக்கு முன்னால் தொடர்ந்து மூன்று முறை தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பச்சைத் தமிழரான ராஜேந்திரனும் தமிழில் தான் பதவி ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு முன்பு அதே தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு ஏ‌.கே.மணியும் பச்சைத் தமிழில்தான் பதவியேற்றுக்கொண்டார்.

தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியின் முதல் தமிழ் எம்.எல்.ஏ.வான கேரள காங்கிரஸ் கட்சியின் கணபதி தொட்டு, இந்த ராஜா வரை இதுதான் கேரளாவில் கட்டமைக்கப்படும் போலியான மரபு.

கேரள சட்டமன்றத்தில் முதன்முதலில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட திருவாளர் கணபதி தான்,தேவிகுளம் பீர்மேட்டை மீட்கச் சென்ற மார்ஷல் நேசமணியையும், அப்துல் ரசாக்கையும், பிஎஸ் மணியையும் மூணாறு நகரில்ஓட ஓட விரட்டி அடித்தவர்.

சிறந்த தொழிற்சங்கவாதியும், இன்றைக்கு தேவிகுளம் பீர்மேட்டில் கொடிகட்டி பறக்கும், South Indian plantation workers Union என்ற தொழிற்சங்கத்தை பின்நாட்களில் நிறுவியவருமான குப்புசாமியின் செவிப்பறையை கிழித்தெறிந்தது சாட்சாத், தமிழில் பதவியேற்றுக் கொண்ட இதே கணபதிதான்.

மூன்று முறையும் தமிழில் பதவியேற்றுக் கொண்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜேந்திரன், கடந்த 2011ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 50 லட்சம் மக்கள் அழிந்து போவார்கள் என்று,தமிழர்கள் பெருவாரியாக வாழும் வண்டிப்பெரியாறு நகரில் தொடர்ந்து 15 நாட்கள் உண்ணாவிரதமிருந்து அணையை உடைக்க கங்கணம் கட்டியவர்.

அது காங்கிரசோ கம்யூனிஸ்ட்டோ, தன்னுடைய கட்சி போடும் உத்தரவை கவனமாக ஏற்று நடக்கும் இந்த அடிமைகள் தமிழில் பதவி ஏற்றால் என்ன மலையாளத்தில் பதவியேற்றால் நமக்கு என்ன?

தமிழகத்தில் உள்ள ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய செய்தியை இந்த ராஜா வழிமொழிவாரா?

மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவே, பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று தீர்மானமிட்ட பின் இதில் கொண்டாட என்ன இருக்கிறது?

தமிழில் பதவியேற்றால் தமிழரா?

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

செவ்வாய் 25 மே 2021