மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

பிளஸ் 2 தேர்வு வரைவு அறிக்கை தயார்!

பிளஸ் 2  தேர்வு வரைவு அறிக்கை தயார்!

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக வரைவு அறிக்கை தயார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. உயர் கல்விக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் அதை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ‘இந்த தேர்வில் ஆல் பாஸ் அறிவித்துவிடலாம். ஆனால் எதிர்காலத்தில் இந்த பாஸ் மதிப்பெண்ணை உயர் கல்வி நிறுவனங்கள் ஏற்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். எனவே தேர்வு கட்டாயம் நடத்தப்படும்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

பிளஸ் 2 தேர்வு தொடர்பாகத் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி இன்று (மே 25) சென்னை தலைமைச் செயலகத்தில் பொய்யாமொழி துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நம்முடைய மாநிலத்தில் கொரோனா பரவல் நிலவரத்தைப் பொறுத்து, தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம்.

மத்திய அரசுடன் நடந்த ஆலோனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் சார்பிலும், ‘ஏற்கனவே உள்ள நடைமுறைபடி தான் தேர்வு நடத்த வேண்டும். அதில் எந்த மாற்றம் இருக்கக் கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் நம்முடைய மாநில பரவல் நிலவரத்துக்குத் தகுந்தார்போல நாங்கள் சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறோம்.

இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஒரு மாணவர் தேர்வுக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் தேர்வு மையத்துக்கு வந்து மீண்டும் வீடு திரும்பும் வரை அரசின் பொறுப்பு முழுமையாக உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக வரைவு அறிக்கை தயாராக உள்ளது. அதனை முதல்வர் பார்வைக்கு அனுப்பியிருக்கிறோம். முதல்வரின் ஒப்புதலைத் தொடர்ந்து அதுகுறித்து தெரிவிக்கப்படும்” என்றார்.

-பிரியா

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

செவ்வாய் 25 மே 2021