மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

முதல்வருடன் ஆலோசித்தது என்ன?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

முதல்வருடன் ஆலோசித்தது என்ன?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (மே 25) காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறை செயலாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தலைமைச் செயலாளர் இறையன்பு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாகனங்கள் மூலம் காய்கறிகளை நகர் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமங்கள் அளவில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

குறைந்த விலையில் சேவை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. நேற்றைய தினம் 6,296 வாகனங்கள் மூலம் விற்பனை  செய்யப்பட்டது. இன்று 13,096 வாகனங்கள் மூலம் 6,500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்கப்பட  எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதை மேலும் தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்கிற காய்கறிகள் பழங்களைச் சந்தைப்படுத்த எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தோட்டக்கலை,  வேளாண் துறை அதிகாரிகள், மினி வேன்கள் மூலம் உற்பத்தி  பொருட்களை எடுத்துச் செல்ல உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

காய்கறிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தாதவாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. காய்கறிகளை வாங்கும் போது தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும்.  சிறு, குறு தெருக்களுக்கு, 3 சக்கர வாகனங்கள் மூலம் சென்று காய்கறிகள் விற்கப்படுகிறது.

நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களைச் சந்தைப்படுத்த அல்லது அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல தேவையான அனுமதி பெற உதவி எண்களைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

வேளாண் விற்பனைத் துறை கட்டுப்பாட்டு அறை எண்: 044-22253884

தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டு அறை எண்: 1800 425 4444

வேளாண்மைத் துறை கட்டுப்பாட்டு அறை எண்: 044-28594338

மாவட்ட வாரியான கட்டுப்பாட்டு அறைகள் எண்கள்:

-பிரியா

  

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 25 மே 2021