மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

ஃபேமிலி மேன்: தடை செய்ய அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம்!

ஃபேமிலி மேன்: தடை செய்ய அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம்!

தி பேமிலி மேன் 2 இணையத்தொடருக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த சீரிஸை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் சீசன் 2 ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என்று அமேசான் அறிவித்தது. அதன் ட்ரெயிலர் மே 19ஆம் தேதி வெளியானது. அதில், சமந்தா இலங்கையிலிருந்து வந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக காட்டப்பட்டுள்ளார். மனோஜ் பாஜ்பாயி, சமந்தாவைப் பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

எனவே இந்தத் தொடரில் தமிழர்களை தீவிரவாதிகளாக காட்ட முயற்சிப்பதாகவும் இதை தடைசெய்ய வேண்டும் என்றும் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராகவும், சமந்தாவுக்கு எதிராகவும் சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் இந்த டிரைலருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள்.

இதன் அடுத்த கட்டமாக தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று (மே 24) மத்திய தகவல் விளம்பரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “தி ஃபேமிலி மேன் எனப்படும் ஹிந்தி இணைய தள தொடரின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் கண்டனத்துக்குரியது. இதில் இடம்பெற்ற காட்சிகள், ஈழ விடுதலை பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது கண்டனத்துக்குரியது. மேலும் இந்தத் தொடர் எந்த வகையிலும் கற்பனையிலும் கூட தமிழ் கலாசாரத்துக்கு மதிப்பு கொண்டிருப்பதாக கருத முடியாது.

இந்தத் தொடரில் தமிழ் பேசும் நடிகை சமந்தாவை பயங்கரவாதியாக முத்திரை குத்துவது உலகம் முழுதும் வாழும் தமிழர்களின் பெருமைக்கு எதிரானதாகும். இந்தத் தொடர் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களையும் மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே இந்த சூழலில் ஃபேமிலி மேன் 2 தொடரை தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஒளிபரப்ப தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வற்புறுத்தியுள்ளார்.

ஒருபக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே இதுபோன்ற கொள்கை சார்ந்த விஷயங்களில் தமிழக அரசின் உடனடி எதிர்வினை, உலகத் தமிழர்கள் மத்தியில் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.

-வேந்தன்

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

செவ்வாய் 25 மே 2021