மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

முன்களபணியாளர்களின் தியாகத்தால்தான் தமிழகம் காப்பற்றப்படுகிறது!

முன்களபணியாளர்களின் தியாகத்தால்தான் தமிழகம் காப்பற்றப்படுகிறது!

செவிலியர் பவானி போன்ற முன்களப்பணியாளர்களின் தியாகத்தால்தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையில் முன்கள பணியாளர்களுக்கு தொற்று ஏற்படுவது அதிகரித்தது மட்டுமில்லாமல், உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், “சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த அன்பு சகோதரி பவானி என்பவர் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.

ஏப்ரல் 28 ஆம் தேதியன்று அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலர் படுக்கை கிடைக்காமல் வெளியே உயிருக்குப் போராடுகின்றனர் என்பதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து,12-05-2021 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில்,மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 25 மே 2021