மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

ஜவாஹிருல்லா - சிவகார்த்திகேயன்: டிஜிபி அலுவலகத்தில் ராஜா மீது புகார்!

ஜவாஹிருல்லா - சிவகார்த்திகேயன்: டிஜிபி அலுவலகத்தில் ராஜா மீது புகார்!

"ஜெயிலர் ஜெயப்பிரகாஷைக் கொன்ற அல் உம்மாவின் ஆள் இன்றைக்கு பாபநாசம் எம்.எல்.ஏ. அவருடைய மகன் இன்று பிரபல சினிமா நடிகரான சிவகார்த்திகேயன்” என்று கடந்த வாரம் அளித்த பேட்டியொன்றில் பாஜகவின் மூத்த தலைவரும், காரைக்குடி சட்டமன்றத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவருமான ஹெச்.ராஜா கூறியிருந்தார். இந்தக் கருத்துக்காக ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஹெச்.ராஜாவின் இந்த பேட்டியைத் தொடர்ந்து ரியாக்ட் செய்த ஜவாஹிருல்லா, "ராஜா பொய் சொல்வதில் வல்லவர், அதன்பின் கேள்விகேட்டால் நீதிமன்றத்தில் கேட்டால் என்னுடைய அட்மின் செய்துவிட்டார் என்று மன்னிப்பு கேட்கும் மனப்பான்மை கொண்டவர். அவர் பலமுறை சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டும் ஒருமுறை தவிர அனைத்து தேர்தலிலும் தோல்வியைக் கண்டிருக்கிறார். தோல்வி கொடுத்த விரக்தியில்தான் அவர் தொடர்பில்லாத வகையிலெல்லாம் என்னை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயப்பிரகாஷ் அல்ல, தாஸ். அவர் கொலை செய்யப்படவில்லை. இதற்கு சிவகார்த்திகேயன் தனியாகவே ராஜா மீது மானநஷ்ட வழக்கு போடலாம். இது ராஜாவின் வன்மம். ஜெயப்பிரகாஷை கொலை செய்தவர் பாபநாசம் எம்.எல்.ஏ. என்று சொன்னதற்காக சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வருவேன். சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன்” என்று ஊடகங்களிடம் கூறினார் ஜவாஹிருல்லா,

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஹெச்.ராஜா மீது தமுமுக - மமகவினர் காவல் நிலையங்களில் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மமகவின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் வழக்கறிஞர் அப்ரார் நேற்று (மே 24) தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் ராஜா மீது புகார் அளித்திருக்கிறார். ராஜாவின் அவதூறுப் புகார்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஹெச்.ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயனும் காவல்துறையில் புகார் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

“கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு அவதூறுகளையும், பொய்களையும் பொதுவெளியில் தாராளமாகப் பேசிவந்தார் ஹெச்.ராஜா. நீதிமன்றத்தையே கூட அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் பகிரங்கமாக விமர்சித்தார். ஆனால், அப்போது அவருக்கு மாநில அரசில் இருந்த செல்வாக்கின் காரணமாக அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் இப்போது திமுக ஆட்சி நடக்கும் நிலையில் ஹெச்.ராஜாவின் மீது தமிழகம் முழுதும் காவல்நிலையங்களிலும், டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார்” என்று தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் மமகவினர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

செவ்வாய் 25 மே 2021