மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

ரேஷன் கடைகளில் ஆளும்கட்சி சின்னம் கூடாது: நீதிமன்றம்!

ரேஷன் கடைகளில் ஆளும்கட்சி சின்னம் கூடாது: நீதிமன்றம்!

கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூசக்

கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் பொங்கல் சிறப்புத் தொகையாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அப்போது ரேஷன் கடைகளில் அதிமுக பேனர் வைக்கப்படுவதாக திமுக தொடர்ந்த வழக்கில், ‘இனி ரேஷன் கடைகளுக்கு அருகே கட்சி பேனர் வைக்கக்கூடாது. ஏற்கனவே வைத்த பேனர்களை அகற்ற வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது முதல்வர் ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.2,000 கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி 96 சதவிகிதம் பேருக்கு ரூ.2,000 வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த தவணையாக ஜூன் 3ஆம் தேதிக்குள் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் ரேஷன் கடைகளுக்கு அருகே திமுகவினர் பேனர்கள் வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கம் அருகே வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு அருகே திமுகவினர் பேனர்கள் வைத்திருப்பதால், அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலைக் கடை அருகே ஆளும்கட்சியினர் விளம்பரப் பலகை வைக்கத் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நேற்று (மே 24), தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், “கொரோனா நிவாரண நிதி வழங்கும் ரேஷன் கடைகளில் உதயசூரியன் சின்னம் வைக்கப்பட்டிருப்பதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, “தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், ஆளும் கட்சியினர் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தற்போது அப்படி ஒரு நிலை இல்லை. தற்போதைய நிலை வேறு அப்போதைய நிலை வேறு” என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் நிவாரண உதவி வழங்கும் போது, அரசு மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர ஆளும் கட்சியை முன்னிலைப்படுத்த கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் புகைப்படம் ரேஷன் கடைகளில் இடம்பெறுவது தவறில்லை. ஆனால் ஆளும்கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது.

நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது. அரசியல் சாயம் பூசக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும்போது கொரோனா தடுப்பு விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

செவ்வாய் 25 மே 2021