மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு!

படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று (மே 24) ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 19,421 பேர் ஆண்கள், 15,446 பேர் பெண்கள்.

அரசு மருத்துவமனைகளில் 227 பேர், தனியார் மருத்துவமனைகளில் 177 பேர் என இன்று மட்டும் 404 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, தமிழகத்தில் 20,872 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து 27,026 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 15,54,759 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 1,68,194 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனையில் 3,01,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 4,985 பேரும், கோவையில் 4,277 பேரும், செங்கல்பட்டில் 1,899 பேரும், ஈரோட்டில் 1467 பேரும், கன்னியாகுமரியில்1083 பேரும், திருவள்ளூரில் 1231 பேரும், திருப்பூரில் 1808 பேரும், மதுரையில் 1453 பேரும், திருச்சியில் 1268 பேரும், கிருஷ்ணகிரியில் 833 பேரும், காஞ்சிபுரத்தில் 813 பேரும், விருதுநகரில் 703 பேரும், திருநெல்வேலியில் 488 பேரும், வேலூரில் 415 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 81 பேரும், கோவையில் 28 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், மதுரையில் 16 பேரும் சேலத்தில் 38 பேரும், திருச்சியில் 22 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும், வேலூரில் 15 பேரும், காஞ்சிபுரத்தில் 15 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

திங்கள் 24 மே 2021