மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

சுதாகரன் விடுதலைக்கு புதிய முயற்சி!

சுதாகரன் விடுதலைக்கு புதிய முயற்சி!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரில் சசிகலா, இளவரசி ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பே விடுதலையாகிவிட, ஜெ.வின் வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுக்கப்பட்ட சுதாகரன் மட்டும் இன்னமும் சிறையிலேயே இருக்கிறார்.

நான்கு ஆண்டு சிறைத் தண்டனை முடியும் நிலையில் சசிகலா மற்றும் இளவரசி இருவரும் அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயை செலுத்திவிட்டு, முன்னும் பின்னுமாக 2021 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் விடுதலையானார்கள்.

சுதாகரனுக்கு அபராதத் தொகையை அவரது உறவினர்கள் செலுத்த முன்வராததால் சிறையிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் சுதாகரனையும் விரைவில் வெளியே கொண்டுவரும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் இப்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து சுதாகரன் வழக்கறிஞர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பில், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும் பத்து கோடி அபராதமும் விதிக்கப்பட்டது, அபராதம் செலுத்தவில்லையென்றால் கூடுதலாக ஒரு ஆண்டுக் காலம் சிறையிலிருக்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. சுதாகரன் நான்கு ஆண்டு, மூன்று மாதம் கடந்தும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார். அவரை அவரது மனைவி சத்யலட்சுமி ஒருமுறைதான் சந்தித்து பேசிட்டு வந்தார். அதன் பிறகு அவரது நண்பர் ஒருவர் பார்த்துள்ளார். சுதாகரன் தந்தை விவேகானந்தன் கடந்த ஆண்டும் இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் சந்தித்தார்.

விவேகானந்தன் -வனிதாமனி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். தினகரன், சுதாகரன், பாஸ்கரன் மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு மகளும் உண்டு, மகளின் கணவர் பெயரும் பாஸ்கர்தான். அவர் சமீபத்தில் இறந்துவிட்டார். விவேகானந்தன் திருச்சியில்தான் வசித்துவந்தார். மருமகன் இறந்துவிட்டதால் மகளுடன் தற்போது சென்னையில் இருந்துவருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவதால் சிறையில் உள்ளவர்களை பிணையில் எடுக்க எளிதான வழிவகைகளை நீதிமன்றங்கள் செய்திருக்கின்றன. அதாவது அபராதத் தொகை செலுத்தமுடியவில்லை என்று நீதிமன்றத்தை நாடினால் வழக்கின் தன்மையைப் பார்த்து ஒரு ஆண்டு காலத்துக்குப் பதிலாக மூன்று மாதமோ அல்லது ஐந்து மாதமோ சிறைத் தண்டனையைக் குறைக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளது. அந்த வழிவகையைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் சுதாகரனுக்காக மனு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. சுதாகரன் தந்தை விவேகானந்தனும், சகோதரர் டிடிவி தினகரனும் இந்த முயற்சியில் இருக்கிறார்கள். அதனால், விரைவில் சுதாகரன் வீடு திரும்புவார்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

-வணங்காமுடி

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

திங்கள் 24 மே 2021