மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

வாக்சின் போட்டு வாட்ஸப்பில் அனுப்பு: கிருஷ்ணசாமி கட்டளை!

வாக்சின் போட்டு வாட்ஸப்பில் அனுப்பு: கிருஷ்ணசாமி கட்டளை!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேர்தல் முடிவுகளுக்குப் பின் கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று (மே 23) தனது கட்சி நிர்வாகிகளோடு காணொலி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. அப்போது நிர்வாகிகளிடம், ‘எல்லாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா?’என்று கேட்டிருக்கிறார். அப்போது பல நிர்வாகிகள், ‘இல்லைங்க. அதப் பத்தி பலரும் பலவிதமா சொல்றாங்க. தடுப்பூசி போட்டுக்கிட்டா ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு’ என்பது போல அச்சமும், தயக்கமும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இன்று (மே 24) கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு கட்டளையிட்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

“கொரோனா இரண்டாவது அலை மிக மிக வேகமாக பரவி வருவதை நீங்கள் அறிவீர்கள். கரோனா ஒரு உயிர்க்கொல்லி என்ற காரணத்தினால் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல அம்சங்களை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதில் தடுப்பூசி என்பது மிக மிக முக்கியமானது ஆகும்.

சாதாரணமாக தலைவலிக்கு சாப்பிடக்கூடிய மருந்திற்கு கூட ஏதாவது ஒரு பக்க விளைவுகள் இருக்கும். அதுபோல இந்த தடுப்பூசிக்கும் பல லட்சத்தில் ஒருவருக்கு சிறிய பாதிப்புக்கள் உண்டாகலாம். அதற்காக அனைவருக்கும் பக்க விளைவுகள் வரும், மாரடைப்பு வரும், உயிர் போகும் என்று ஏற்கனவே சில அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான பிரச்சாரத்திற்கு புதிய தமிழகம் கட்சியினரும் ஆட்பட்டுவிடக்கூடாது.

உலகெங்கும் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். புதிய தமிழகம் கட்சியினர் சமூகப்பணியில் முன் களப்பணியாளர்களுக்கு ஒப்பானவர்கள். எனவே, கண்டிப்பாக அனைத்து பொறுப்பாளர்களும் ஓரிரு நாட்களுக்குள் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்ச உணர்வுகளை நீக்கும் சமூக பணியிலும் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்ததன் காரணமாக திருநெல்வேலி மாவட்ட முக்கிய பொறுப்பாளரை இழந்து விட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, அனைத்து பொறுப்பாளர்களும் மாவட்ட முகாம்களில் முன்பதிவு செய்து தடுப்பூசியை போடும் போட்டோக்களை எனக்கு வாட்சப்பில் அனுப்பி வைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

திங்கள் 24 மே 2021