மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் பிரபல பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் 20 ஆண்டுகளாக கணக்குபதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியராக ராஜகோபாலன் பணியாற்றி வந்தார். இவர் மீது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

ஆசிரியர் மீதான புகார் கடிதமும், குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஸ்கீரின் ஷாட் போன்றவை ஆதாரபூர்வமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் டீன் ஷீலா ராஜேந்திரனுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அதில், ”ஆசிரியர் ராஜகோபாலன் பாடம் எடுக்கும்போது மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்திலும், பதிலளிக்க முடியாத தர்மசங்கடமான கேள்விகளையும் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். மாணவிகளின் உடல் உறுப்புகள் பற்றி ஆபாசமாக பேசுவது, பள்ளியில் வகுப்புகள் நடந்தபோது, மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் தொட்டு பேசியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தபோது, உரிய நடவடிக்கை எடுக்காமல் வாய் வார்த்தையில் மட்டும் அவரை கண்டித்துள்ளனர். இனிமேல் இதுபோன்று புகார் கொடுத்தால் தேர்வில் பாஸ் பண்ண முடியாது என அந்த ஆசிரியர் மாணவிகளை மிரட்டியுள்ளார்.

ஊரடங்கில், ஆன்லைனில் வகுப்புகள் நடந்தபோது, மாணவிகளின் வாட்ஸ் அப் நம்பர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு தவறான எண்ணத்தில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, அவர்களின் போட்டோ மீது ஆபாச கருத்து தெரிவிப்பது, அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வேறு எந்த உடையும் இல்லாமல் வகுப்பு எடுப்பது, ஆபாசமான இணையதள பக்கம் லிங்குகளை அனுப்புவது, மாணவிகளை சினிமாவுக்கு அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

உடனடியாக ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் வெளியே தெரியாமல் பள்ளி நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்திருந்தார்.

இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த பள்ளி பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சொந்தமானது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து, பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் புரவலர்களுள் ஒருவரான ஒய்.ஜி. மகேந்திரன் இந்த சம்பவம் குறித்து பள்ளி டீனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

”இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்களை பாதிக்காத வகையில், உரிய முறையில் விசாரணை நடத்தி ஆசிரியர் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எவ்விதமான அவப்பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியை நிர்வகிப்பதில் தனக்கோ, தன் மகளுக்கோ எவ்விதமான பங்கும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விளக்கமளிக்க பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு மாவட்ட முதன்மை அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிரச்சினை பெரியதாக உருவெடுப்பதையடுத்து, பள்ளி நிர்வாகம் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

நங்கநல்லூரில் வசித்து வரும் ராஜகோபாலன் வீட்டிற்குச் சென்று அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவிகளுக்கு ஆபாச தகவல்களை அனுப்ப பயன்படுத்திய லேப்-டாப் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆயிரம் விளக்குப்பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜகோபலனிடம் குழந்தைகள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி மற்றும் தாயாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழுவின் தலைவர்தான் இந்த ராஜகோபாலன் என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 24 மே 2021