மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

’கோரிக்கைகளைப் பதிவிடுக’!

’கோரிக்கைகளைப் பதிவிடுக’!

கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க ‘கோரிக்கைகளைப் பதிவிடுக’ எனும் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது அதிரடி திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அமைச்சர்.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், மற்றும் கட்டிடங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் வாடகை மற்றும் குத்தகைத் தொகை, குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. மேலும், கோயில்களின் திருப்பணிகள், திருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் குறித்தும், பக்தர்களும் பொதுமக்களும் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்ய ‘கோரிக்கைகளைப் பதிவிடுக’ எனும் ஓர் புதிய திட்டம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைப் பயன்படுத்தி, தங்களது கோரிக்கைகளைப் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவைப்படின் ஸ்கேன் (Scan) செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம். கோரிக்கைகளைப் பதிவு செய்த பின்னர், தங்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் ஒப்புகை அட்டை அனுப்பப்படும். தங்களது கோரிக்கைகள் இணைய வழியாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பப்படும்.

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். மேலும், கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னால் விரிவாக ஆய்வு செய்யப்படும். கோரிக்கைகளின் மீது 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், ஒப்புகை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

9 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா:  எடப்பாடிக்கு  அதிகரிக்கும் அழுத்தம்!

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி ...

7 நிமிட வாசிப்பு

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கனகராஜ் மரணம்:  சகோதரர் உட்பட 2 பேர் கைது!

திங்கள் 24 மே 2021