மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

ஆசிரியர் மீது பாலியல் புகார் : வலுக்கும் கண்டனங்கள்!

ஆசிரியர் மீது பாலியல் புகார் : வலுக்கும் கண்டனங்கள்!

சென்னை கேகே நகரிலுள்ள பத்மசேஷாத்ரி(பிஎஸ்பிபி) பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கேகே நகரிலுள்ள பிஎஸ்பிபி தனியார் பள்ளியின் முதல்வருக்கு, முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ராஜகோபாலன் என்பவர், ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை ஆசிரியரைப் பள்ளியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களை வெளிப்படுத்த விரும்பாத நிலையில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்த பிரச்சினையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் திமுக எம்.பி.கனிமொழி,” சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இவருடைய ட்வீட்டை ரீட்வீட் செய்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுபோன்று, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், ”சென்னை - கே.கே.நகரிலுள்ள #PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய விசாரணை செய்து பள்ளி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

”சென்னை தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 24 மே 2021