மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா!

ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று(மே 23) ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 18,42,344 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 240 பேர், தனியார் மருத்துவமனைகளில் 182 பேர் என இன்று மட்டும் 422 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,468 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 25,196 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 15,27,733 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,94,143 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 2,63,01,572 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,76,824 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 19,725 பேர் ஆண்கள், 15,758 பேர் பெண்கள்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 5,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மொத்தம் 4,78,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் 3944 பேரும், செங்கல்பட்டில் 1,982 பேரும், ஈரோட்டில் 1352 பேரும், கன்னியாகுமரியில் 1160 பேரும், மதுரையில் 1139 பேரும், , தஞ்சையில் 1176 பேரும், திருவள்ளூரில் 1259 பேரும், திருவண்ணாமலையில் 1006 பேரும் திருப்பூரில் 1446 பேரும், திருச்சியில் 1407 பேரும், சேலத்தில் 966 பேரும், காஞ்சிபுரத்தில் 897 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 81 பேரும், செங்கல்பட்டில் 29 பேரும், கோவையில் 21 பேரும், திருவள்ளூரில் 27 பேரும், வேலூரில் 31 பேரும், கன்னியாகுமரியில் 20 பேரும், தஞ்சையில் 20 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 23 மே 2021