மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

செயற்கை விலைக்கு விற்றால்....: அமைச்சர் எச்சரிக்கை!

செயற்கை விலைக்கு விற்றால்....: அமைச்சர் எச்சரிக்கை!

தமிழகத்தில் காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ள நிலையில், அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக நாளை முதல் ஒரு வாரத்திற்குக் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள இன்று ஒரு நாள் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் கடைகளில் மக்கள் அதிகளவு குவிந்துள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்தி சில வியாபாரிகள் அதிக விலைக்குக் காய்கறிகளை விற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கைப் பயன்படுத்தி காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினை பயன்படுத்தி காய்கறிகளைச் செயற்கையாகக் கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்தது. எனவே வணிக நிறுவனங்களும், வியாபாரிகளும் ஏற்கனவே விற்ற விலைக்குக் காய்கறிகளை விற்க வேண்டும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் விற்பனை இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. அந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மளிகை பொருட்களும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே அவற்றையும் முந்தைய விலைக்கு விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்வது குறித்து வேளாண்மை செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு உதவிகளை அரசு செய்யும்.

நியாய விலை கடைகள் மூலம், 96 சதவிகிதம் பேருக்கு ரூ.2000 வழங்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு சமயத்தில் நியாய விலை கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வாங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதுபோன்று, அதிக விலைக்குக் காய்கறிகளை விற்கும் நபர்களைச் சங்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இன்று இரவு வரை பகல் கொள்ளை: காய்கறிகளின் விலை நிலவரம்!

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

ஞாயிறு 23 மே 2021