மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

தடுப்பூசி திட்டத்தை முறையாகச் செயல்படுத்துக: ஓபிஎஸ்

தடுப்பூசி திட்டத்தை முறையாகச் செயல்படுத்துக: ஓபிஎஸ்

கொரோனா வைரசிலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுகிறது.

தமிழகம் கேட்ட அளவிற்கு மத்திய அரசு இன்னும் தடுப்பூசிகளை வழங்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 21ஆம் தேதி திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதற்கு முன் தினம் மே 20ஆம் தேதி திருப்பூரில், 18 - 44 வயதுடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆனால் போதிய அளவில் தடுப்பூசி இல்லாததால் இளைஞர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்.

அதில், “ஒரு செயலை செய்வதற்கு முன், அதன் நோக்கம், வேண்டிய சாதனங்கள், தகுந்த காலம், செயல்முறை, தக்க இடம் ஆகிய ஐந்தையும் ஆராய்ந்து அறிந்த பிறகுதான் செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

இவை அனைத்தும் தமிழக முதல்வர் திருப்பூரில் தொடங்கி வைத்த 18 - 44 வயதினருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தில் பின்பற்றப்பட்டதா என்றால் நிச்சயம் இல்லை.

இதற்கு முக்கிய காரணம் வேண்டிய சாதனம், அதாவது தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பில் இல்லை என்பதுதான். இதை நான் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

தடுப்பூசி போடுவதற்காக இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் அரசு மருத்துவமனைகளுக்கு வந்த போது அவர்களுக்குக் கிடைத்தது வெறும் ஏமாற்றமே. இது வெறும் ஏமாற்றத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. மேலும் கொரோனா அதிகரிக்க வழி வகுத்துவிட்டது. இதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் இதற்காகப் பொதுமக்கள் வெளியில் செல்வது தவிர்க்கப்பட்டிருக்கும். கொரோனா பரவல் குறைக்கப்பட்டிருக்கும்.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் சரியாக நடைபெறுகின்றதா என்றால் அதிலும் சில இடர்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது . இந்த இரண்டு தடுப்பூசிகளில் கோவிஷீல்டு அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவாக்சின்

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது முறையும் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதால் அது தற்போது இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் உள்ள சிக்கல்களை அரசின் கவனத்திற்கு எடுத்து வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இதனை சுட்டிக் காட்டுகிறேனே தவிர அரசைக் குறை கூற வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை.

எனவே, தடுப்பூசி தாராளமாகக் கிடைக்கவும் 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி போடும் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவரையும் சென்றடையவும் வழிவகை செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஆந்திரா ,பீகார் ,குஜராத், கர்நாடகா, கேரளா ,மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ,ராஜஸ்தான்,உத்தரப் பிரதேசம் ,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விடக் கூடுதலாகத் தடுப்பூசிகள் பெற்றிருப்பதைப் பிரதமரிடம் நேரில் சென்றோ அல்லது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பியோ , கடிதம் மூலமாகவோ சுட்டிக்காட்டி தமிழ் நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 23 மே 2021