மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

இன்று இரவு வரை பகல் கொள்ளை: காய்கறிகளின் விலை நிலவரம்!

இன்று இரவு வரை பகல் கொள்ளை:  காய்கறிகளின் விலை நிலவரம்!

நாளை (மே 24) முதல் ஒரு வார காலத்துக்கு எந்த விதத் தளர்வுமற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. ஒரு வார காலம் காய்கறிக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் (மெடிக்கல், ஏடிஎம் திறந்திருக்கும்) என்பதால்... நேற்று பிற்பகல் முதல் இரவு 9 மணி வரையும், இன்று காலை முதல் இரவு 9 மணி வரையும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்தது.

இதை ஒட்டி ஏதோ திருவிழாக் கூட்டம் போல தமிழ்நாடு முழுதும் கடைகளை நோக்கி மக்கள் கூட்டம் அலை அலையாய் மோதி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காய்கறி விநியோகம் நடக்கும் என்று அரசு கூறியிருந்தபோதிலும், ஏதோ உலகத்தின் கடைசி நாள் இன்றுதான் என்பதைப் போல மக்கள் காய்கறிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இதனாலேயே கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள் வருத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஒரு நாளில் வைத்ததுதான் விலை என்று கிராமம் முதல் சென்னை வரை அனைத்து காய்கறிக் கடைகளிலும் காய்கறிகள் கடுமையாக விலையேறியிருக்கின்றன.

எழுத்தாளர் பா. ராகவன் இதுபற்றி இன்று (மே 22)தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு விலைப்பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

அதன் படி சென்னையில் ஒரு கிலோவுக்கான விலைப்பட்டியல்....

வெங்காயம் 70

தக்காளி 45

இஞ்சி 100கிராம் 30

கீரைக்கட்டு 30

எலுமிச்சம்பழம் 7

சவ்சவ் 40

சாம்பார் வெங்காயம் 120

பீன்ஸ் 110

உருளை 60

கொத்துமல்லிக் கட்டு 25

கேரட் 55

என்று பட்டியலிட்டு, ‘நண்பர்களுக்கு பகல் கொள்ளை தின வாழ்த்துகள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் பா. ராகவன்.

அவரது டைம் லைனிலேயே மேலும் பல ஊர்களைச் சேர்ந்த வாசகர்கள் இதை ஆமோதித்து தத்தமது ஊரின் விலைப்பட்டியலை மார்க்கெட்டில் இருந்து நேரடி ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள்.

அதன்படி சென்னை நங்கநல்லூரில்....

வெண்டை - 150/kg

உருளை கிழங்கு - 90

வெங்காயம் - 80

பீன்ஸ் - 250

என்று விற்கப்படுவதாக வெங்கடேஷ் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கோவையில்

பீன்ஸ் 160

கேரட் 120

தக்காளி 40

வெண்டைக்காய் 80

என்ற விலையில் விற்கிறது என்று ராம்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் கொத்தமல்லி ஒரு கட்டு 100 ரூபாய் என்று வாசகி சண்முகப் பிரியா குறிப்பிட்டுள்ளார்.

பூண்டு ஒரு கிலோ 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இவ்வாறு இன்றைய தினத்தை பகல் கொள்ளை தினம் என்று எழுத்தாளர் பா. ராகவன் குறிப்பிட்டதை உறுதி செய்து தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி விலையின் நிலவரத்தைப் பட்டியலிட்டுள்ளார்கள்.

இந்த பகல் கொள்ளை இரவு 9 மணி வரை நடக்கும் என்பது கூடுதல் கொடுமை! எச்சரிக்கையோடு அரசு நிறுத்திக் கொள்ளுமா?

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 23 மே 2021