மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

முழு ஊரடங்கு: கடை வீதிகளில் குவியும் மக்கள்!

முழு ஊரடங்கு: கடை வீதிகளில் குவியும் மக்கள்!

தமிழகத்தில் நாளை முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்க கடை வீதிகளில் குவிந்து வருவதை காணமுடிகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக நேற்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்ற அனைத்துக் கட்சி குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மே 24ஆம் தேதி முதல் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தொடர்ந்து மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ள இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கடை வீதிகளில் காலை முதலே குவிந்து வருவதைக் காண முடிகிறது. கூட்டத்துக்கு முன்பே வாங்கி விடலாம் எனக் கருதி காலையிலிருந்து மார்க்கெட்டுகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும் மக்கள் படையெடுத்திருக்கின்றனர்.

இதனால் கிராமங்களில் உள்ள சாலைகளும் பரபரப்பாகக் காணப்படுகின்றன.

மதுரை கீழமாசி கடை வீதிகளில் நேற்று மாலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர். அதுபோன்று, நெல்பேட்டை, கீழமாரட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் என்பதால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதலும், மக்கள் கடை வீதிகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

சென்னையில், கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகள், பழங்கள் வாங்க மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இன்று ஒருநாள் மட்டுமே தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், காய்கறியின் விலை அதிகரித்திருப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். கரூர் காமராஜ் மார்க்கெட்டிலும் பொதுமக்கள் அதிகளவு குவிந்துள்ளனர்.

அதுபோன்று ஜவுளி நகைக் கடைகளும் இன்று திறக்கப்படவுள்ளன. நேற்று தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபல ஜவுளி நகைக் கடைகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்று, கடை திறக்கப்படும் நேரம் மற்றும் எவ்வளவும் நேரம் திறந்திருக்கும் என்பதைக் குறுஞ்செய்திகளாக அனுப்பியுள்ளன.

இதனால் கடந்த 10 தினங்களாக அமைதியாக இருந்த சாலைகள் இன்று மீண்டும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 23 மே 2021