மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

தடுப்பூசி: வானதி சீனிவாசனுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர்!

தடுப்பூசி: வானதி சீனிவாசனுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர்!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கோவைக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் 70 படுக்கைகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் நேற்று(மே 22) தொடங்கப்பட்டது. இந்த 36ஆவது சித்த மருத்துவ மையத்தின் திறப்பு விழாவில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் " இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதாரண படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களும், 600க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடுவதில் கோவைக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்பப்படுகிறது. மத்திய அரசு மூலம் இதுவரை பெற்ற 78 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பூசிகளில், 71 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 6 சதவீதம் தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. அதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 5 லட்சத்து 4370 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்த படியாக, கோவையில்தான் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படுள்ளது என்பதை, இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தமிழகத்துக்கு எவ்வளவு தடுப்பூசி வந்தது, அதனை தெளிவுபடுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் சமூக வலைதளம் மூலம் கேட்டுள்ளார். அதற்குரிய பதிலாகக் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அரசு வெளிப்படைத் தன்மை கொண்ட அரசு. மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணியில் எந்தவித பாதிப்பும் இருக்காது. மூன்றாவது அலை வந்தாலும், அதனை தடுக்க 100 மருத்துவமனைகள் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ட்விட்டரில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், “கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை. எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 23 மே 2021