மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் நேற்று 36,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 35,873 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததுபோன்று, இன்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நேற்று 467 பேர் உயிரிழந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 448 ஆக குறைந்துள்ளது.

இன்று(மே 22) 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 18,06,861 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 279 பேர், தனியார் மருத்துவமனைகளில் 169 பேர் என இன்று மட்டும் 448 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, தமிழகத்தில் 20,046 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

25,776 பேர் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 15,02,537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 1,66,639 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 19,895 பேர் ஆண்கள், 15,978 பேர் பெண்கள்.

மருத்துவமனையில் 2,84,278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 5,559 பேரும், கோவையில் 3165 பேரும், செங்கல்பட்டில் 1954 பேரும், ஈரோட்டில் 1758 பேரும், காஞ்சிபுரத்தில் 1017 பேரும், விருதுநகரில் 1287 பேரும், கன்னியாகுமரியில் 1621 பேரும், திருவள்ளூரில் 1511 பேரும், திருப்பூரில் 1466 பேரும். மதுரையில் 1352 பேரும்,திருச்சியில் 1351 பேரும், கிருஷ்ணகிரியில் 781 பேரும். நாகையில் 651 பேரும், திருநெல்வேலியில் 589 பேரும், வேலூரில் 588 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 86 பேரும், கோவையில் 32 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், மதுரையில் 28 பேரும், திருப்பூரில் 23 பேரும், ராமநாதபுரத்தில் 25 பேரும், இன்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 22 மே 2021