மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

தளர்வுகளற்ற ஊரடங்கு : 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தளர்வுகளற்ற ஊரடங்கு : 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்றும், நாளையும் 4500 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 24 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஊடரங்கை கடுமையாக்கவும், நீட்டிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, மே 24 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என இன்று மதியம் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, அடுத்த ஒரு வாரத்துக்கு கடைகள் அனைத்தும் மூடப்படுவதால், இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இயங்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகளும் திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

மேற்கண்ட இருநாட்களில் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு மக்கள் சென்றிட ஏதுவாக, சென்னையின் முக்கிய இடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து மதுரைக்கு இரவு 11.30 மணிக்கும், திருச்சிக்கு 11.45 மணிக்கும் நெல்லைக்கு இரவு 8 மணிக்கும் தூத்துக்குடிக்கு இரவு 7 மணிக்கும் கடைசி பேருந்து இயக்கப்படும்.

பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும். மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

சனி 22 மே 2021