மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

கிசான் திட்ட நிதியை நிறுத்துங்கள்: மோடிக்கு பாஜக தலைவர் கடிதம்!

கிசான் திட்ட நிதியை நிறுத்துங்கள்: மோடிக்கு பாஜக தலைவர் கடிதம்!

கொரோனா பாதித்த மாநிலங்களை பாஜக ஆளும் மாநிலங்கள் என்றும் பாஜக ஆளாத மாநிலங்கள் என்றும் பாஜகவினர் பகிரங்கமாக தொலைக்காட்சி விவாதங்களில் பிரித்துப் பேசுகின்றனர். இந்த நிலையில் அண்மையில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

அவர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை மேற்கு வங்காளத்துக்கு ஒதுக்க வேண்டாம், தற்போது அதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மே 20 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஊழல் நடந்துள்ளது. மேலும் ஊழல் ஏற்படக்கூடும் என்று மாநில பாஜக அஞ்சுகிறது. எனவே பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் அடுத்த தவணையை மேற்கு வங்காள விவசாயிகளுக்கு தற்போதைக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும். மாநிலத்தில் இத்திட்டத்தால் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியலைத் துல்லியமாகத் தொகுக்க மத்திய அமைச்சர்கள் குழுவை மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும். இதுவரை மேற்கு வங்காள அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய விவசாயிகளின் பட்டியலை முழுமையாக ஆராய வேண்டும்.

இதுகுறித்த சந்தேகங்கள் தீரும் வரை மேற்கு வங்காள மாநிலத்துக்கு பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தை நிறுத்த வேண்டும். எனது இந்த கோரிக்கை விவசாயிகளின் உண்மையான நலனுக்காக” என்று பாஜக தலைவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இத்தகவலை மேற்கு வங்காளத்தில் வெளியாகும் வங்காள இதழனான ஆனந்த்பசார் வெளியிட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக பல மாநிலங்களில் பாஜக புகார் கிளப்பியது. தமிழகத்தில் கூட கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தில் பெருமளவு ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது. பாஜக தமிழக தலைவர் முருகன் இது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாயிடம் புகார் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்பாட்டங்களும் நடந்தது. ஆனால், ஒரு போதும் இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் மேற்கு வங்காள பாஜக வைத்த இந்த கோரிக்கை மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

*

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

சனி 22 மே 2021