மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

டாஸ்மாக் கடைகள் திறப்பு? : மேலாண் இயக்குநர் விளக்கம்!

டாஸ்மாக் கடைகள் திறப்பு? : மேலாண் இயக்குநர் விளக்கம்!

இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 24ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மேலும் ஒருவாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த ஒரு வாரத்திற்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்காததால், இன்றும் நாளையும், அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த இரண்டு நாட்களில் எல்லாவற்றிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கூறுகையில்,” டாஸ்மாக் கடைகளை திறந்தால், ஒரே நேரத்தில் அனைவரும் சமூக இடைவெளியின்றி கூட்டமாக வந்து குவிவார்கள். அதனால், நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதனால், இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 22 மே 2021