மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு!

மேலும் ஒரு வாரத்திற்கு  தளர்வுகளற்ற ஊரடங்கு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்குத் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று, மருத்துவத் துறையினர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி மே 31ஆம் தேதி வரை உறுதியாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், மே 24ஆம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்ற அனைத்துக் கட்சி குழுவினருடன் இன்று (மே 22) ஆலோசனை நடத்தினார்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மே 24ஆம் தேதியிலிருந்து தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகத்துக்கு அனுமதி.

பழங்கள், காய்கறிகள் தோட்டக்கலைத் துறை மூலமாகச் சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வழங்கப்படும்.

தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரியக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்.

ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மால்கள் திறக்க அனுமதி இல்லை

வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்” என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 22 மே 2021