மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

தமிழகத்தில் எந்த ஊரில் பாதிப்பு அதிகம் : அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் எந்த ஊரில் பாதிப்பு அதிகம் : அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் சென்னை, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்றபோது, தமிழகத்தில் பெரியளவில் தட்டுப்பாடு இருந்தது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 100 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்து கொண்டிருந்தன. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததால், நோயாளிகளை உள்ளே அழைத்து செல்ல முடியாமல் வாகனங்களிலேயே காத்திருந்த நிலை இருந்தது. தற்போது, காத்திருக்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து என்ற அளவில் சூழ்நிலை மாறியுள்ளது.

அதனையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல், ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகள் யாரும் காத்திருக்கக் கூடாது, அவர்களுக்கு ஜீரோ டிலே வார்டு என்பதை உருவாக்கி அனுமதிக்க வேண்டும். அந்த வார்டில் அனுமதிக்கப்பட்ட பின்பு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை தயார் செய்து, அதற்கு மாற்ற வேண்டும் என்று எங்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, நாளை(இன்று) இந்த ஜீரோ டிலே வார்டு தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா ஜீரோ டிலெ வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(மே 22) திறந்து வைத்தார். அப்போது, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 130 படுக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, மருத்துவமனையில் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 2050 ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் காத்திருக்காமல், மருத்துவமனைக்கு வந்தவுடனே, வார்டில் அனுமதிக்கும் வகையில் ஜீரோ டிலே வார்டு அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை பார்க்கவோ, கவனித்து கொள்ளவோ அவர்களது உறவினர்களுக்கு அனுமதி இல்லை. நோயாளிகளை கவனித்துக்கொள்ள கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த 11 லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. இது அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

பின்பு, செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், ”தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது.

4 ஆயிரம் பேரின் நெகடிவ் கேஸ்களை, பாசிட்டிவ் என மாற்றி அறிவித்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் ஆய்வகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் 18-45 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொற்று காலத்தில் அத்தியாவசிய பணியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கடந்த முறை பொதுமக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இன்னும் கூடுதலாக மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்றின் பாதிப்பை வேகமாக குறைக்க முடியும்” என தெரிவித்தார்.

-வினிதா

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

சனி 22 மே 2021