மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

‘தளர்வுகளற்ற ஊரடங்கு முடிவு’: முதல்வர் ஸ்டாலின்

‘தளர்வுகளற்ற ஊரடங்கு முடிவு’: முதல்வர் ஸ்டாலின்

தளர்வுகளற்ற ஊரடங்கு முடிவை அரசு எடுக்க வேண்டியிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற கட்சியினருடன் முதல்வர் இன்று (மே 22) ஆலோசனை நடத்தினார்.

காலை மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனையின் போது, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்குக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி குழுவுடன் முதல்வர் ஆலோசனையைத் தொடங்கினார்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும். அதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கின் போது, பொது மக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை அறிவிக்கிறோம். காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்காக இந்த தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் இதைப் பயன்படுத்தி அவசியமின்றி வெளியே வருவது சிலருக்கு வழக்கமாகிவிட்டது. காவல்துறையினரின் அறிவுரைகளையும் அவர்கள் கேட்பதில்லை.

முழு ஊரடங்கை விடுமுறைக் காலமாக நினைத்து வெளியே வருகின்றனர். கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன், கொரோனாவை அடுத்தவருக்குக் கொடுக்கவும் மாட்டேன் என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக்கொண்டால் தான், இந்நோய்த் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கொரோனா குறித்த பயம் மக்களின் பேச்சில் தெரிகிறது, ஆனால் செயலில் தெரியவில்லை. இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் தளர்வுகளற்ற முழுமையான ஊரடங்கினை தீவிரமாகவும் கடுமையாகவும் கடைப்பிடித்தால் மட்டுமே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

மாவட்டங்கள் தோறும் ஆய்வு மேற்கொண்ட போதும் இதே கருத்தைத்தான் சொன்னார்கள். எனவே தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய முடிவினை அரசு எடுக்க வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 22 மே 2021