மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

பினராயி விஜயனுக்கு தங்கம் தென்னரசு தந்த புத்தகம்!

பினராயி விஜயனுக்கு தங்கம் தென்னரசு தந்த புத்தகம்!

கேரள முதல்வராக பினராயி விஜயன் நேற்று (மே20) பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள இடதுசாரி முன்னணி சார்பில் பினராயி விஜயனே இரண்டாம் முறையாக முதல்வர் பதவியேற்றுள்ளார்.

இந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான சுற்றுப் பயணத்தில் முதல்வர் இருப்பதால், அவருக்கு பதிலாக அமைச்சர் தங்கம் தென்னரசு திருவனந்தபுரம் சென்று கேரளாவின் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

ட்விட்டர் மூலம் கேரள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க, அதற்கு பினராயி விஜயனும், ‘நன்றி பிரதர் ஸ்டாலின்’ என்று பதிலளித்திருந்தார்.

இதற்கிடையே பதவியேற்பு விழாவுக்கு முதல்வரின் சார்பில் சென்றிருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல்வரின் சார்பில் ஒரு புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். மறைந்த திமுக தலைவரும் ஐந்து முறை தமிழக முதல்வருமாக இருந்தவருமான கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் ஆங்கிலத்தில், ‘Karunanidhi: A Life’ என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தைதான் பினராயி விஜயனுக்கு பரிசாக அளித்தார் தங்கம் தென்னரசு.

அப்புத்தகத்தைப் பார்த்து மகிழ்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கலைஞர் பற்றி தான் அறிந்த சில விஷயங்களை நினைவு கூர்ந்ததோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி ஆர்வத்தோடு விசாரித்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 21 மே 2021