மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

வீடு திரும்பினார் விஜயகாந்த்

வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (மே 20) வீடு திரும்பினார்.

உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் ஓய்விலிருந்து வருகிறார். அவ்வப்போது சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மே 19ஆம் தேதி அதிகாலை, 3 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, முடிவும் தொற்று பாதிப்பு இல்லை என வந்தது.

அதிகாலையிலேயே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், தேமுதிக தொண்டர்கள் அவரது உடல்நிலையை எண்ணி பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார் எனக் கட்சித் தலைமை அறிவித்தது.

அதன்படி நேற்று மாலை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருக்கிறார் விஜயகாந்த். மேலும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அவரை கட்சியினர் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வெள்ளி 21 மே 2021