மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

”எனது சகோதரர் பினராயிக்கு வாழ்த்துகள்”: ஸ்டாலின்

”எனது சகோதரர் பினராயிக்கு வாழ்த்துகள்”: ஸ்டாலின்

கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்குப் பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது. கொரோனா பரவல் காரணமாக புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா தள்ளிப்போனது.

இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளுடன், 500 பேர் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு, திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.

பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து, 20 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

புதிய அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் புதுமுகங்கள். புதிதாக 10 எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற பினராயி விஜயனுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், “எனது சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்கள். அவருடைய உறுதியும் விடாமுயற்சியும் சமூக சமத்துவம், அமைதி மற்றும் மக்களின் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 20 மே 2021