மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

மூதாட்டிக்கு உதவிய பெண்ணை பாராட்டிய முதல்வர்!

மூதாட்டிக்கு உதவிய பெண்ணை பாராட்டிய முதல்வர்!

சேலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த மூதாட்டிக்கு உதவி செய்த இளம்பெண்ணை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில், பல தன்னார்வலர்கள் முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மூதாட்டி ஒருவருக்கு யாருமே உதவ முன்வராத நிலையில், துணிச்சலாக இளம்பெண் ஒருவர் உதவி செய்துள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி உடல் நலக்குறைவு காரணமாக தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பாதி வழியிலேயே மூதாட்டிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி சாலையில் விழுந்தார். கொரோனா அச்சம் காரணமாக யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

அந்த வழியாக சென்ற இளையராணி என்பவர் மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிதாபமாக அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இன்று சேலம் மாவட்டத்திற்கு கொரோனா தொற்று பரவல் ஆய்வுக்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மூதாட்டிக்கு உதவிய பெண்ணை சேலம் விமான நிலையத்திற்கு வரவழைத்து அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், “வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றிருந்தபோது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது! என்று குறிப்பிட்டுள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

வியாழன் 20 மே 2021