மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

மருந்து பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கமா?

மருந்து பட்டியலிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கமா?

பிளாஸ்மா தெரபியை தொடர்ந்து கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து விரைவில் நீக்கப்படலாம் என டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவி வந்ததையடுத்து, சில மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. அதில் ரெம்டெசிவிர் மருந்தும் ஒன்று. அதன்படி, பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும், இது உயிர் காக்கும் மருந்து அல்ல என்றும், கொரோனா பாதித்த அனைவருக்கும் இந்த மருந்து தேவை இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்து வந்தனர்.

ஆனால், ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக மக்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்து இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து ரெடெம்சிவிர் மருந்தை வாங்கி சென்றனர். இது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ரெம்டெசிவிர் மருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என அறிவித்து, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட நாடுகள் இது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளி வந்ததாக தெரியவில்லை.

ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ரெம்டெசிவிர் மருந்து பலன் அளிப்பதாக எந்த ஆதாரமும் இல்லாததால், ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படலாம் என டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தெரபியோ (தற்போது நீக்கப்பட்டுள்ளது) அல்லது ரெம்டெசிவிரோ, சிகிச்சையில் பலன் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவை விரைவில் நீக்கப்படலாம். தற்போது, மூன்று மருந்துகள் மட்டுமே சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 20 மே 2021